சூரியசக்தி மின்சாரத்தால் கைபேசிகளுக்கு சக்தி ஏற்றி அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சூரியசக்தி மின்சாரத்தால் கைபேசிகளுக்கு சக்தி ஏற்றி அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்!

அரசு பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சோலார் எனப்படும் சூரிய சக்தி மின்சாரம் மூலம் கைபேசிக்கு சக்தி ஏற்றி மாணவர்கள் அசத்தினர்.

பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 நாள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இறுதி நாளில்  கலை நிகழ்ச்சிகளுடன் கண்காட்சி நிறைவுபெற்றது.
நிறைவு விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், உதவித் தலைமை ஆசிரியர் தேன்மொழி, பொறுப்பாசிரியர்கள் சுமதி, ரமணிபாய் முன்னிலை வகித்தனர். 

இதில் அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

கண்காட்சியில் 8ம் வகுப்பு மாணவர்கள் ஜித்தேஷ், கபிலன், செந்தில்நாதன் ஆகியோர் சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் எடுத்து மின்விளக்குகளை எரிய வைத்தும், கைபேசிகளுக்கு சார்ஜ் செய்தும் காட்டி அசத்தினர். முடிவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

மூலக்கதை