மசூத்தை பயங்கரவாதியாக அறிவிக்க பிரான்ஸ் தீவிரம்

தினமலர்  தினமலர்
மசூத்தை பயங்கரவாதியாக அறிவிக்க பிரான்ஸ் தீவிரம்

புதுடில்லி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து தடை செய்யும் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்ய பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு பாக்.கில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு பொறுப்பேற்றது.இந்நிலையில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து தடை செய்யும் திட்டத்தை ஐ.நா. சபையில் தாக்கல் செய்ய ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.இதற்கு முன் 2017ல் மசூத் அஸாரை தடை செய்யும் திட்டத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா தாக்கல் செய்தது. அதற்கு பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சீனாவின் எதிர்ப்பால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.

மூலக்கதை