இந்தியாவுடன் டி20, ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணியில் கோல்டர் நைல், டர்னர் சேர்ப்பு: சிடில், மிட்செல் மார்ஷ் நீக்கம்

தினகரன்  தினகரன்
இந்தியாவுடன் டி20, ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணியில் கோல்டர் நைல், டர்னர் சேர்ப்பு: சிடில், மிட்செல் மார்ஷ் நீக்கம்

மெல்போர்ன்: இந்திய அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ், பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் அதிரடியாக  நீக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி விசாகப்பட்டிணத்தில் பிப். 24ம் தேதியும், 2வது டி20 போட்டி  பெங்களூருவில் பிப். 27ம் தேதியும் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறும்இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆரோன் பிஞ்ச் தலைமையில் மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்துள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடியபோது  இடம் பெற்றிருந்த வீரர்களில் 11 பேர் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்கள் பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ், ஆல் ரவுண்டர் ஸ்டான்லேக் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.முன்னணி வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இடம் பெறவில்லை. கேன் ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர் நைல், ஆஷ்டன் டர்னர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிக் பாஷ் டி20 தொடரில் சிறப்பாக  செயல்பட்டு 22 விக்கெட் வீழ்த்தியதன் மூலமாக கேன் ரிச்சர்ட்சன் தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஷான் மார்ஷ் மனைவிக்கு 2வது குழந்தை பிறக்க உள்ளதால், அவர் 3வது ஒருநாள் போட்டிக்கு முன்பாக அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷான் மார்ஷுக்கு மாற்று வீரராக டார்சி ஷார்ட் இடம் பிடித்துள்ளார்.  ஆஸி. டி20, ஒருநாள் அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜேசன் பெஹரன்டார்ப், நாதன் கோல்டர் நைல், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜா, நாதன்  லயன், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், டார்சி ஷார்ட், கேன் ரிச்சட்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா.அட்டவணைதேதி    போட்டி    களம்பிப். 24    முதல் டி20    விசாகப்பட்டிணம்பிப். 27    2வது டி20    பெங்களூருமார்ச் 2    முதல் ஒருநாள்    ஐதராபாத்மார்ச் 5    2வது ஒருநாள்    நாக்பூர்மார்ச் 8    3வது ஒருநாள்    ராஞ்சிமார்ச் 10    4வது ஒருநாள்    மொகாலிமார்ச் 13    5வது ஒருநாள்    டெல்லி

மூலக்கதை