மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு...மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு...மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் அளித்து வந்த நிலையில் தற்போது 3 சதவீதத்துடன் சேர்ந்து 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் தடை சட்டத்தின் படி, ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவன் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஆர்.ஆர்.டி.எஸ் புதிய போக்குவரத்து திட்டத்துக்கு ரூ.30,274 கோடி நிதி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி - காஸியாபாத் - மீரட் இடையே 82.15 கி.மீ தூரம் புதிய போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை