பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் பதில்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் பதில்

டெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸார் பாகிஸ்தானில் இருப்பது அனைவரும் அறிந்ததே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. புல்வாமா கொடூரமான தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் கண்டிக்கவில்லை. தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இந்தியா தந்தால் பாகிஸ்தான் பிரதமர் விசாரணை நடத்த முன்வர வேண்டும் என்றும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அரசு சாட்சி இல்லாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது என்று இன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதனை தெரிவித்தார். மேலும் சவூதி இளவரசருடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் இருந்ததால் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தேன். இந்திய அரசாங்கம் தகுந்த சாட்சியங்களை அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். அதனை தொடர்ந்து இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க தயாரானால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். போரை  தொடங்குவது மக்களின் கைகளில் தான் உள்ளது. போரினால் ஏற்படும் விளைவுகள் கடவுளுக்கு தான் தெரியும். பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். பாகிஸ்தான் மண்ணில் இருந்து யாரும் வன்முறையை பரப்புவது இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்படி பொறுப்பாகும். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியிருப்பது தவறு.  புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன் இருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை