தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இந்தியன் ரயில்வே 6வது முறையாக சாம்பியன்

தினகரன்  தினகரன்
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி இந்தியன் ரயில்வே 6வது முறையாக சாம்பியன்

ஹிசார்: தேசிய சீனிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் (ஏ டிவிஷன்) இந்தியன் ரயில்வே விளையாட்டு வாரிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.அரியானா மாநிலம் ஹிசாரில் நேற்று நடைபெற்ற பைனலில் ரயில்வே விளையாட்டு வாரியம் - மத்தியப் பிரதேசம் அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ரயில்வே அணி கோல் மழை பொழிந்தது.  வந்தனா கட்டாரியா (10’), நேஹா (12வது மற்றும் 16வது நிமிடம்), நவ்னீத் கவுர் (25வது, 28வது நிமிடம்) கோல் போட்டனர். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று  6வது முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மத்தியப் பிரதேசம் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. 3வது இடத்துக்கான போட்டியில் ஹாக்கி அரியானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.

மூலக்கதை