புல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதல் சம்பவம் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘‘புல்வாமா தாக்குதல் சம்பவம், பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்துவிட்டதைதான் காட்டுகிறது’’ என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்ற பிரதமர் மோடி, அர்ஜென்டினா குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராணுவம், அணுசக்தி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் துறையில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதன்பின் பிரதமர் மோடியும், அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரியும் கூட்டாக  பேட்டியளித்தனர்.  பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:உலகின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் தீவிரவாதம் மிகப் பெரிய ஆபத்து என்பதை நானும், அதிபர் மேக்ரியும் ஒப்புக் கொண்டுள்ளோம். புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவம், பேச்சுவார்த்தைக்கான நேரம்  முடிந்துவிட்டதை காட்டுகிறது. தற்போது, தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தீவிரவாதம் மற்றும் அதை ஆதரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குவது, தீவிரவாதத்தை ஊக்குவிப்பது  போன்றது. அணு எரிபொருள் சப்ளை நாடுகள் (என்எஸ்ஜி), ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு (எம்டிசிஆர்), ஆஸ்திரேலியா குரூப் ஆகியவற்றில் இந்தியா இணைய அர்ஜென்டினா ஆதரவு தெரிவித்துள்ளது. சர்வதேச சோலார்  கூட்டணியில் அர்ஜென்டினா இணைய இந்தியா வரவேற்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.  அதிபர் மேக்ரி அளித்த பேட்டியில், ‘‘தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியாவும், அர்ஜென்டினாவும் இணைந்து செயல்படும்’’ என்றார்.

மூலக்கதை