ஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
ஐதராபாத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் ரூ.10க்கு புடவை வாங்க வந்த பெண்கள் இடையே தள்ளுமுள்ளு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருமலை: ஐதராபாத்தில் ரூ.10க்கு புடவை வழங்குவதாக கூறிய பிரபல ஷாப்பிங் மாலுக்கு வந்த பெண்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உள்ளனர்.தெலங்கானா மாநிலம், ஐதராபாத் சிந்திபேட்டையில் சிஎம்ஆர் ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ரூ.10க்கு புடவை வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து அதிகாலை முதலே  பெண்கள் அங்கு குவிய தொடங்கினர். மேலும் ஷாப்பிங் மால் திறக்கப்பட்டபோது ஒட்டுமொத்தமாக அங்கிருந்த பெண்கள் அனைவரும் பத்து ரூபாய் புடவையை வாங்குவதற்காக ஷட்டரை உடைத்துக்கொண்டு மாலுக்குள்  சென்றனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த தள்ளுமுள்ளுவில் 5 பெண்கள் அணிந்திருந்த தங்க செயின்கள், ரூ.6 ஆயிரம் மற்றும் வங்கி டெபிட் கார்டுகள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சிந்திபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை