டென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி

தினகரன்  தினகரன்
டென்னிஸ் வீராங்கனை சானியாவை விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: தெலங்கானா பாஜ எம்எல்ஏ போர்க்கொடி

திருமலை: ‘‘பாகிஸ்தான் மருமகளான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை அரசு விளம்பரத்தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’’ என்று தெலங்கானா பாஜ எம்எல்ஏ ராஜாரெட்டி போர்க்கொடி தூக்கியுள்ளார். தெலங்கானா மாநில அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக விளம்பர தூதராக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டென்னிஸ் வீராங்கனை சானியா  மிர்ஸாவை அறிவித்தார். இதற்காக சானியா மிர்ஸாவுக்கு  இரண்டு கட்டமாக  தெலங்கானா மாநில அரசு ரூ.2 கோடியும் வழங்கி உள்ளது. இந்நிலையில் பாஜ எம்எல்ஏ ராஜா ரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது பிறந்த நாளை கொண்டாட  வேண்டாம் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், பாகிஸ்தான் நாட்டின் மருமகளான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெலங்கானா மாநில விளம்பர தூதர் பதவியில் இருந்து மாநில அரசு நீக்க வேண்டும்  என்றார்.

மூலக்கதை