காஷ்மீரில் பதற்றமான சூழலையடுத்து பாகிஸ்தான் தூதர் டெல்லியிலிருந்து பாகிஸ்தான் புறப்பட்டார்

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் பதற்றமான சூழலையடுத்து பாகிஸ்தான் தூதர் டெல்லியிலிருந்து பாகிஸ்தான் புறப்பட்டார்

டெல்லி: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது டெல்லியிலிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார். காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழலையடுத்து, தமது தூதரை அவசர ஆலோசனைக்கு பாகிஸ்தான் அழைத்துள்ளது. கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதல் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதலாக கருத்தப்பட்டு வருகிறது. இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் காரணமாக தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் பாகிஸ்தான் மீதான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக இந்தியா வந்தார்.மேலும் இந்த தற்கொலை படை தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை உடனே இஸ்லாமாபாத் திரும்ப பாகிஸ்தான் உத்தரவிட்டது. பாகிஸ்தான் அரசின் உத்தரவை அடுத்து, பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது அவசர ஆலோசனைக்காக  டெல்லியிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை