மும்பையில் லஷ்கர்-இ-தலிபான் என இளைஞர் ஒருவர் தமது வை-பை சிக்னல் பெயரை மாற்றி வைத்ததால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
மும்பையில் லஷ்கர்இதலிபான் என இளைஞர் ஒருவர் தமது வைபை சிக்னல் பெயரை மாற்றி வைத்ததால் பரபரப்பு

மும்பை: மும்பையில் இளைஞர் ஒருவர் தமது வை-பை சிக்னல் பெயரை லஷ்கர்-இ-தலிபான் என மாற்றியதைத் தொடர்ந்து சக குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். கல்யாண் என்ற இடத்தில் உள்ள அம்ருத் ஹெவன் காம்ப்ளெக்ஸ்-ல் அடுக்குமாடிக் குடியிருப்பும் அமைந்துள்ளது. அங்கு நேற்று வை-பை இணைக்க முயற்சித்த ஒரு இளைஞர், தமது வீட்டுக்கு அருகே லஷ்கர் - இ - தலிபான் என்ற பெயரில் மற்றொரு வை-பை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக தமது குடியிருப்புக்கான வாட்ஸ் ஆப் குழுவில் இதைப் பகிர்ந்து எச்சரித்ததும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் 20 வயதான ஒரு இளைஞரை பிடித்த போலீசார், அவனை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். தமது வை-பையை யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக விளையாட்டுக்காக அவ்வாறு மாற்றிவைத்ததாக தெரிவித்தார். தீவிர விசாரணையில் அதை உண்மை என அறிந்த போலீசார் இளைஞரை கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

மூலக்கதை