லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!

லண்டனைச் சேர்ந்த இளம் திருநங்கையின் புதிய கண்டுபிடிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
லண்டனை சேர்ந்தவர் கர்மின் லியூ (27). திருநங்கையான இவர் Carmen Liu Lingerie என்ற பெயரில் திருநங்கைகளுக்கான உள்ளாடைகளை தயாரித்துள்ளார்.
 
திருநங்கைகள் அணியும் உள்ளாடைகள் அவர்களுக்கு வசதியாக இல்லை என்ற புகார் அதிகம் எழுந்ததாகவும், அதன் தாக்கத்தின் காரணமாக இதனை தயார் செய்ததாகவும் கர்மின் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த உள்ளாடைகள் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யாத திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டடுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
திருநங்கை கர்மினின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை