முடிவுக்கு வந்தது குஜ்ஜார் போராட்டம்

தினமலர்  தினமலர்
முடிவுக்கு வந்தது குஜ்ஜார் போராட்டம்

ஜெய்ப்பூர், கல்வி மற்றும் அரசு வேலைகளில், 5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக, ராஜஸ்தான் அரசு உத்தரவாதம் அளித்ததை அடுத்து, குஜ்ஜார் இனத்தினர், எட்டு நாட்களாக நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.





ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இந்த மாநிலத்தில், குஜ்ஜார், ரெய்க்கா ரெபாரி, கடியா லுஹார், பஞ்ஜாரா மற்றும் கடாரியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இவர்கள், கல்வி மற்றும் அரசு வேலைகளில், 5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ரயில் வழித்தடங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், இவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து, மறியலில் ஈடுபட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இந்நிலையில், குஜ்ஜார் உட்பட, ஐந்துசமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைகளில், 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, ராஜஸ்தான் சட்டசபையில்சமீபத்தில் நிறைவேறியது.இருப்பினும், 'இந்த மசோதாவுக்கு சட்டரீதியான சிக்கல் ஏற்பட்டால், அரசு தங்கள்சமூகத்துக்கு உறுதுணையாக நிற்கும் என, எழுத்து வாயிலாக உறுதி


அளித்தால் மட்டுமே, போராட்டத்தை கைவிடு வோம்' என, குஜ்ஜார் இனத்தினர் தெரிவித்தனர்.இதையடுத்து, ராஜஸ்தான் அரசு, எழுத்துபூர்வ உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, போராட்டம் நேற்று கைவிடப்பட்டது.

மூலக்கதை