தனியாருக்கு கடை ஒதுக்கீடு இல்லை! ஆவின் நடத்தப்போகுது 'பார்லர்'

தினமலர்  தினமலர்
தனியாருக்கு கடை ஒதுக்கீடு இல்லை! ஆவின் நடத்தப்போகுது பார்லர்

கோவை:கோவையில், மேலும், 35 இடங்களில், 'ஆவின்' பார்லர் அமைக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றை தனியாரிடம் ஒப்படைக்காமல், ஆவின் நிர்வாகமே நடத்தும் முடிவில் உள்ளது.இதன் பொது மேலாளர் ஈஸ்வர ஜென் மாட்டி கூறியதாவது:ஆவின் பால் விற்பனையை உயர்த்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில், புதிதாக, 35 ஆவின் பார்லர்கள் வைக்க அரசு அனுமதி கிடைத்துள்ளது. இடம் கண்டறிந்து, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றால்போதும். புதிதாக அமைக்க உள்ள பார்லர்கள், 35ம், வெள்ளை மற்றும் நீல நிறத்தில், 200 சதுரடி பரப்பில், அழகிய தோற்றத்தில் இருக்கும்; சென்னையில் வடிவமைத்து வழங்குவர்.தனியாரிடம் வழங்காமல், ஆவின் பணியாளர்களால் நிர்வகிக்கப்படும். அனுமதியற்ற பார்லர்கள் பட்டியல், மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி இடத்தில், அவை செயல்படுகின்றன. அவற்றை அகற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அனுமதியற்ற பார்லர் அகற்றப்பட்டால், வியாபார வாய்ப்பை கணக்கிட்டு, புதிதாக பார்லர் அமைக்கலாமா, வேண்டாமா என, ஆவின் நிர்வாகம் முடிவு செய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.சந்தையில் விற்பனைபண்ணையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் வாரச்சந்தைகளில், பால் விற்கப்படுகிறது. 'மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் பட்சத்தில், இம்முயற்சி விரிவுபடுத்தப்படும்' என, அலுவலர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை