வளர்த்த கடா மார்பில் பாயுமா...? ஆபத்து காத்திருக்கிறது இம்ரான் கானுக்கு...  பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலான அசார், ஹபீஸ்

தினமலர்  தினமலர்
வளர்த்த கடா மார்பில் பாயுமா...? ஆபத்து காத்திருக்கிறது இம்ரான் கானுக்கு...  பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலான அசார், ஹபீஸ்



'காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, 'ஜெய்ஷ்-இ-முகமது' அமைப்பு, இந்தியாவுக்குமட்டுமல்ல; பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும்' என, சர்வதேசபாதுகாப்பு வல்லுனர்கள்எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றது முதலே, காஷ்மீர் மீது, 'கண்' வைத்துள்ள பாகிஸ்தானின், எல்லை தாண்டிய பயங்கரவாதம், 70 ஆண்டுகளாக தொடர்கிறது. ஒவ்வொரு முறையும், பயங்கரவாதத்தை கிளறி விட்டு குளிர்காயும் பாகிஸ்தான், கடைசியில், 'மரண அடி' வாங்கி வருகிறது. இந்திய - பாக்., போர், வங்கதேச நாடு உதயம், கார்கில் போர், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என, ஒவ்வொரு முறையும், தோல்வி கண்டு வரும் பாகிஸ்தான், அங்கு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஐ.எஸ்.ஐ., உளவு நிறுவனத்தை ஏவி, பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த, முயல்கிறது.
இன்னொரு ஒசாமா
ஒசாமா பின்லேடனை ஆரம்பத்தில் ஆதரித்த அமெரிக்கா, கடைசியில், அதே பயங்கரவாதியால் பயங்கர தாக்குதலுக்கு ஆளாகியது. ரஷ்ய படைகளை ஆப்கனில் இருந்து அகற்ற தலிபான்களை வளர்த்து விட்ட,அமெரிக்காவுக்கு கடைசியில் முல்லா ஒமர் சிம்ம சொப்பனமாக இருந்தார்.இருவரையும், கடைசியில் அமெரிக்காவே தாக்குதல் நடத்தி அழித்தது.தற்போது, பாகிஸ்தான்ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மசூத் அசாரையும், மும்பை தாக்குதல் நடத்திய ஹபீஸ் சயித்தையும், விடுதலை போராளிகளாக கொண்டாடி, அடைக்கலம் கொடுத்து ஆதரித்து வருகிறது.மசூத் அசாரை முளையிலேயே கிள்ளி எறியாமல் வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு, எதிர்காலத்தில் பெரும் அபாயம் ஏற்படும் எனஎச்சரிக்கின்றனர், பாதுகாப்பு வல்லுனர்கள்.வல்லுனர்கள் கருத்துஅமெரிக்க சி.ஐ.ஏ., நிறுவன பாதுகாப்பு நிபுணர் புரூஸ் ரீடல்:காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதாக, தானாகவே முன்வந்து பொறுப்பேற்றுள்ள, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நடவடிக்கை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஐ.எஸ்.ஐ., அமைப்பு தான் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளது என்பதை மறைமுகமாக அறிய முடிகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானுக்கு பல முறை அமெரிக்கா அறிவுரை கூறியும், அந்நாடு கண்டு கொள்ளாமல், பயங்கரவாதிகளுக்கு உரமூட்டி வருகிறது.பாகிஸ்தானில் நேரடியாக கால் பதித்துள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, பாக்., அதிபர் இம்ரான்கானுக்கு தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவரது நிர்வாகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் அமையும்.அமெரிக்கா தேசிய பாதுகாப்பு கவுன்சில் முன்னாள்ஆலோசகர் அனிஷ் கோயல்: பாக்., ஆதரவுடன் காஷ்மீரில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பு, இரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய - பாக்., உறவை பாதிக்கும் செயல்களிலும், போர் பதட்டத்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும். காஷ்மீரில் இயங்கி வரும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் நிர்மூலமாக்க, பிரதமர் மோடிக்கு கடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க வெளிநாட்டுவிவகாரங்களுக்கான கவுன்சில்பிரதிநிதி ஆலிசா அயர்ஸ்: காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக, சர்வதேச அமைப்புகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. தங்கள் மண்ணில் இருந்து பயங்கரவாத விஷத்தை பரவச் செய்யும் இந்த அமைப்புகள் மீது, பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச அமைப்புகள் அழுத்தம் தர வேண்டும்.அமெரிக்க அமைதி நிறுவன பிரதிநிதி மூவத் யூசுப்: காஷ்மீரில் நடந்த தாக்குதல் இந்திய - பாகிஸ்தான் இடையே நிலவி வந்த, நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் செயல். இந்திய பிரதமர் மோடியால், இனி அமைதியாக இருக்க முடியாது. பாகிஸ்தானும் இந்தியாவின் பொறுமையை சோதித்து, விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இரு நாடுகள் இடையே, பதட்டம் உச்சத்தை எட்டியுள்ளது.இவ்வாறு, சர்வதேச பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு பதிலடி



இரும்புக்கரத்தால் அடக்குங்கள்!

தீவிரவாதத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இளைஞர்கள் நிறைந்த நம் நாட்டில், பலமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தீவிரவாதத்தை,இரும்புக்கரத்தால் அடக்கவேண்டும்.--சையத் அகமது, கல்லுாரி மாணவர்.

பாவம் பார்க்காதீர்!



கோழைத்தனமான தாக்குதலுக்கு தொடர்புடைய ஒவ்வொருவனையும் பாவம் பார்க்காமல், நம் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்த வேண்டும். அதுவே, இறந்த வீரர்களுக்கு நாம் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலி.-உமேஷ், வினோபாஜி நகர்.


போர் தொடுக்கணும்
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து, இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கிறது. இதற்கு ஒரே முடிவு, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதே. அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டு வீசி அழிக்க வேண்டும்.--அருண், செம்மாணி செட்டிபாளையம்.

விழிப்புடன் செயல்படணும்
இதுபோன்ற சம்பவம், இனியும் நடைபெறாமல் நாட்டை பாதுகாக்க வேண்டும். இந்திய மக்கள் ஒன்றிணைந்து, இறந்த வீரர்களது குடும்பத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும்.---டேவிட் ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம்.

பாடம் புகட்டுங்கள்



ஒரு கன்னத்தில் அறைந்தால்,மறு கன்னத்தை காட்டுஎன்பதெல்லாம் அந்தக்காலம். நம் வீரத்தை சீண்டிப்பார்த்த பாகிஸ்தான் காட்டுமிராண்டிகளுக்கு தக்க பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது.-பிரேம்குமார், ஹோப் காலேஜ்.

நிவாரணம் வழங்குங்க



விளையாட்டில் சாதித்தவர்களுக்கு கோடிக்கணக்கில் கொடுக்கும்போது, 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி இவர்களுக்கு போதாது. க்குடும்பங்களுக்கு உரிய உதவியை, உடனடியாக வழங்க வேண்டும்.-அருள்குமார், பீளமேடு.

விசாரணை அவசியம்


தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணைமேற்கொள்ள வேண்டும். வெடிபொருட்கள் எவ்வாறுவந்தது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.-மகேந்திரன், கரும்புக்கடை.
கூடுதல் அதிகாரம்
பயங்கரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சி.ஆர்.பி.எப்., மற்றும் ராணுவத்தினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். ளவுப்பிரிவை வலுப்படுத்த வேண்டும்.---கோவிந்தராஜ், கணேசபுரம்.

சீண்ட கூடாது


இந்திய ராணுவத்தினர் எதற்கும் தயாராகவே உள்ளனர். தீவிரவாதத்தை ஒழிக்க, முழு பலத்தையும் காட்ட வேண்டும். இனி, நம்மை யாரும் சீண்டக்கூடநினைக்கக்கூடாது.--ஜோசி, ஆர்.எஸ்.புரம்

மூலக்கதை