கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!

PARIS TAMIL  PARIS TAMIL
கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ்வின் சாதனையை முறியடித்துள்ளார்.
 
இலங்கை அணிக்கெதிரான டர்பனில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார்.
 
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருந்த கபில்தேவ்வை பின் தள்ளி, ஸ்டெயின் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 
கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதனை தற்போது வெறும் 91 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 437 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார்.
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டுவர்ட் பிரோட், 126 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 437 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஸ்டெயினுடன் ஏழாவது இடத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை