இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன்

தினமலர்  தினமலர்
இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன்

டி.ராஜேந்தர் - உஷா தம்பதியரின் இரண்டாவது மகனும், சிம்புவின் சகோதரரும், இசையமைப்பாளருமான குறளரசன், பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

சிம்புவை போன்றே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த குறளரசன், அண்ணன் நடித்த, "இது நம்ம ஆளு" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் ஆல்பம் மற்றும் ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில், இஸ்லாம் மத குருக்கள் ஆலோசனைப்படி குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையுடன் வாழ்பவன் நான். என் குடும்பத்தில் சிம்பு, சிவ பக்தராகவும், மகள் இலக்கியா கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றி வருகின்றனர். இப்போது குறளரசன் இஸ்லாம் மதத்தை பின்பற்ற தொடங்கி இருக்கிறார் என கூறியுள்ளார் டி.ராஜேந்தர்.

மூலக்கதை