லட்சுமியின் என்டிஆர் - சந்திரபாபு நாயுடு வில்லன் ?

தினமலர்  தினமலர்
லட்சுமியின் என்டிஆர்  சந்திரபாபு நாயுடு வில்லன் ?

ராம்கோபால் வர்மா, அகஸ்தியா இணைந்து இயக்கியுள்ள 'லட்சுமியின் என்டிஆர்' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தை தான் வில்லனாக சித்தரித்து இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. டிரைலரில் உள்ள சில காட்சிகள் அதற்கான சந்தேகத்தை வலுவாக்குவதாக உள்ளது என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரான என்டிஆர், குடும்ப வாழ்க்கையில் லட்சுமி சிவபார்வதி நுழைந்தார். அவரை, தன் 70வது வயதில் திருமணம் செய்து கொண்டார் என்டிஆர். அதன்பின் அவருக்கு எதிராக மகன் பாலகிருஷ்ணா, மருமகன் சந்திரபாபு நாயுடு களத்தில் குதித்தனர். தெலுங்கு தேசம் கட்சி உடைந்து சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றார். இந்த அரசியல் விஷயங்கள் தான் 'லட்சுமியின் என்டிஆர்' படத்தில் பரபரப்பாக திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விரைவில் தேர்தல் வரும் நிலையில் இந்தப் படம் வெளிவந்தால் அது சந்திரபாபு நாயுடுவின் இமேஜைக் குலைக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதனால், பிரச்சினையில்லாமல் இந்தப் படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மூலக்கதை