சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்ததையடுத்து, சுவிட்சர்லாந்தில் அயல் நாட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ளது.
 
2017ஐ விட சற்று அதிகரித்து 2018இல் அந்த எண்ணிக்கை சுமார் 31,000 ஆகியது. அதாவது கிட்டத்தட்ட 2018 இறுதிக் கணக்கின்படி 2.1 மில்லியன் அயல் நாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்கிறார்கள்.
 
அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
 
சுவிட்சர்லாந்தில் வாழும் அயல் நாட்டவர்களில் பெரும்பான்மையினர் இத்தாலி நட்டவர்கள், அவர்களைத் தொடர்ந்து ஜேர்மானியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் அதிகம் வாழ்கின்றனர்.
 
சுவிட்சர்லாந்தின் அரசியல் கட்சிகள் தடையில்லா போக்குவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடல்லாத சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள நாடுகளான ஐஸ்லாந்து, Liechtenstein மற்றும் நார்வே ஆகிய நாட்டின் மக்களை தனது நாட்டிற்குள் தடையின்றி அனுமதிக்கிறது.
 
ஆனால் சுவிஸ் மக்கள் கட்சி உட்பட சில குழுக்கள் இந்த தடையில்லா போக்குவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாக்கெடுப்புக்கு முயற்சி செய்து வருகின்றன.
 
ஆனால் சுவிஸ் அரசு இந்த வாக்கெடுப்பு திட்டத்தை எதிர்க்கிறது, சுவிட்சர்லாந்தின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களில் தடையில்லா போக்குவரத்து என்பது ஒரு முக்கிய பங்கு என்று அது கூறுகிறது.

மூலக்கதை