பிங்க் ரீமேக் படப்பிடிப்பில் அஜித் இன்று முதல் பங்கேற்பு

தினமலர்  தினமலர்
பிங்க் ரீமேக் படப்பிடிப்பில் அஜித் இன்று முதல் பங்கேற்பு

சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் பிங்க் ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துடன் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ளாத நிலையில், மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார் எச்.வினோத். மேலும், அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் நீதிமன்ற காட்சிகளாக இருப்பதால் அதற்காக ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டுள்ளதாம்.

அந்த செட்டில் இன்று முதல் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜித் நடிக்கும் பெருவாரியான காட்சிகளை அந்த செட்டிற்குள்ளேயே படமாக்கி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை