தெலுங்கானா அமைச்சரவை வரும்,19ல் விரிவாக்கம்

தினமலர்  தினமலர்
தெலுங்கானா அமைச்சரவை வரும்,19ல் விரிவாக்கம்


ஐதராபாத்,: தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், ஆளும் கட்சி அபார வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.இதையடுத்து, டிச., ௧௩ல், முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். அவருடன், முகமது அலி மட்டும், உள்துறை அமைச்சரானார்.இருவரை தவிர, வேறு யாரும் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை. புதிய ஆட்சி அமைந்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அமைச்சரவை விரிவுபடுத்தப்படாதது, கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


ஜோதிட நிபுணர்கள் ஆலோசனைப்படி, அமைச்சரவை விரிவாக்கத்தை, சந்திரசேகர ராவ் காலம் தாழ்த்து வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.இந்நிலையில், வரும், 19ம் தேதி முகூர்த்த நாள் என்பதாலும், தெலுங்கு காலண்டரின்படி, மகா சுதா பவுர்ணமி தினம் என்பதாலும், அன்று, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய, சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.இது தொடர்பாக, கவர்னர், நரசிம்மனை சந்தித்து, பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியலை, அவர் அளித்துள்ள தாக, முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மொத்தம், 119 சட்டசபை உறுப்பினர்களை உடைய, தெலுங்கானா மாநிலத்தில், அமைச்சரவையில், அதிகபட்சமாக, 17 பேர் இடம்பெற முடியும்.

மூலக்கதை