புல்வாமா தாக்குதல்:இன்று அனைத்து கட்சி கூட்டம்

தினமலர்  தினமலர்
புல்வாமா தாக்குதல்:இன்று அனைத்து கட்சி கூட்டம்

புதுடில்லி: புல்வாமா தாக்குதல் தொடர்பாக இன்று பிரதமர் மோடி அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்ட உள்ளது.
காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், நேற்று முன்தினம், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது, பாக்.,கைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பயங்கரவாதி, வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை மோதச் செய்ததில் சி.ஆர்.பி.எப்., வாகனத்தில் இருந்த, 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்; பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


இந்நிலையில் பிரதமர் மோடி அரசு முதன் முதலாக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்ட உள்ளது. முன்னதாக புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு காங். தனது முழு ஆதரவு தரும் என காங். தலைவர் ராகுல் கூறியிருந்தார். இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ராகுல் பங்கேற்பாரா அல்லது புறக்கணித்து கட்சி சார்பில் மூத்த தலைவரை கலந்து கொள்வாரா சொல்வாரா என்பது குறித்த தகவல் இல்லை.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையி்ல், பதன்கோட், உரி, நக்ரோட்டா தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக மத்திய அரசு கூட்ட உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகளின் ஒருமித்த ஆதரவை பெற வேண்டி நடக்க உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை