திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு தேர்தல் கோரி மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

தினகரன்  தினகரன்
திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு தேர்தல் கோரி மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி:  கலைஞரின் மறைவை தொடர்ந்து திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது. இதில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் கடந்த மாதம் 28ம் தேதி இடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டு  ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து மனுதாரர் கேகே.ரமேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு ரத்து செய்யப்பட்டது. அதில் நாங்கள் கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், அந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு ஏற்ப,  தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார். மேலும்,  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மூலக்கதை