புல்வாமா தாக்குதல்: அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் ஆலோசனை

தினமலர்  தினமலர்
புல்வாமா தாக்குதல்: அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் ஆலோசனை

புதுடில்லி: புல்வாமா தாக்குதல் தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், நேற்று முன்தினம், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது, பாக்.,கைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பயங்கரவாதி, வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை மோதச் செய்ததில் சி.ஆர்.பி.எப்., வாகனத்தில் இருந்த, 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்; பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



இந்நிலையில் பிரதமர் மோடி அரசு முதன் முதலாக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் மற்றும் மற்ற கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையி்ல், பதன்கோட், உரி, நக்ரோட்டா தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக மத்திய அரசு கூட்ட உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகளின் ஒருமித்த ஆதரவை பெற வேண்டி நடக்க உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை