புல்வாமா தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி: காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற நூலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்தும் அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே தீவிரவாத இயக்கங்களும் அவர்களுக்கு பொருளுதவி செய்தவர்களும் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்கள் என்றும் இதற்கான விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்து வந்த வர்த்தக நட்பு நாடு என்ற அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் இன்று சொந்த ஊருக்கு டெல்லியில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

மூலக்கதை