'கட்கரி' படம் சர்ச்சை இயக்குனர் விளக்கம்

தினமலர்  தினமலர்
கட்கரி படம் சர்ச்சை இயக்குனர் விளக்கம்

மும்பை, ''மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, கட்கரி பிரசார படமல்ல,'' என, அந்த படத்தின் இயக்குனர், அனுராக் புசாரி கூறியுள்ளார்.பாலிவுட் நடிகர், அனுபம் கெர் நடிப்பில், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு, தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற, பெயரில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது.சிவசேனா கட்சி நிறுவனர், பால் தாக்கரேயின் வாழ்க்கை வரலாறு, தாக்கரே என்ற பெயரில் எடுக்கப்பட்டது. பாலிவுட் நடிகர், விவேக் ஓபராய் நடிப்பில், பிரதமர், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரியின் வாழ்க்கை வரலாறு, கட்கரி என்ற பெயரில், ஹிந்தியில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் கட்கரியாக, ராஹுல் சோப்டா நடித்து உள்ளார். இந்த படத்தின் டிரைலர், சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இது, பா.ஜ.,வுக்கான பிரசார படம் போல் இருப்பதாக, சர்ச்சை எழுந்தது.இது குறித்து, படத்தின் இயக்குனர், அனுராக் புசாரி கூறியதாவது:கட்கரி திரைப்படம், பிரசாரத்துக்காக எடுக்கப்பட்டதல்ல. நிதின் கட்கரியின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை மட்டும், அதில் கூறிஉள்ளேன்.படத்தை தயாரிப்பதற்கு, கட்கரியிடம் அனுமதி கேட்கவில்லை. அவரது மனைவி காஞ்சன் மற்றும் கட்கரியின் பால்ய நண்பர்களிடம் தகவல்களை திரட்டி படமாக்கிஉள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை