வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு

தினகரன்  தினகரன்
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான்  ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என  மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.வரி ஏய்ப்பை தடுப்பது, கருப்பு பணம் மீட்பு, போலி பான் எண்களை ஒழிப்பது போன்ற காரணங்களுக்காக கண்காணிப்பை எளிதாக்கும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதனை உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி) நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:வருமான வரி சட்டப்படி, பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததை ெதாடர்ந்து, வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் இந்த பணிகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.சிபிடிடி தலைவராக பி.சி.மோடி நியமனம்மத்திய நேரடி வரிகள் ஆணைய தலைவராக இருந்த சுசில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, இவருக்கு பதிலாக பிரமோத் சந்திர மோடியை (பி.சி.மோடி) மத்திய அரசு நியமித்துள்ளது.  1982ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியான இவர், வருமான வரித்துறையின் பல்வேறு பதவிகளை வகுத்துள்ளார். வரும் ஜூன் மாதம் வரை பணியில் நீடிப்பார்.

மூலக்கதை