மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்!

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஸ்கூபா டைவிங் மூலம் வனத்துறையினர் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். 

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார்வளைகுடா கடற்பகுதியில் உள்ள 21 தீவுககளை சுற்றிலும் கடல் ஆமை, டால்பின் உள்ளிட்ட பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் கடல்வளத்தை பாதுகாக்கவும், அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்களால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறதா என்பதை கண்டறியவும் ராமநாதபுரம் வனத்துறையினர் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஆய்வு செய்தனர்.

ஸ்கூபா டைவிங் நீச்சல் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடலுக்கடியில் பவளப்பாறைகளில் உள்ள பிளாஸ்டிக் பாக்கெட்கள், தூக்கி வீசப்பட்ட மீன்பிடி வலைகள், எண்ணெய்ப் பைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.

பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடலுக்கடியில் உள்ள பிளாஸ்டிக் பைகளை அகற்றும் பணி வனத்துறையினர் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மூலக்கதை