உறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்!

PARIS TAMIL  PARIS TAMIL
உறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்!

ஜமைக்காவில் ஆடவர் ஒருவர், அதிர்ஷ்டக் குலுக்கில் சுமார் 1.6 மில்லியன் டாலர் பரிசு பெற்றார்.
 
பரிசுப் பணத்தைப் பெறும்போது தமது உறவினர்கள் தம்மை அடையாளம் காணக் கூடாது என்பதற்காக அவர், முகமூடி அணிந்து வந்ததாக உள்ளூர் நாளேடான ஜமைக்கா ஸ்டார் தெரிவித்தது.
 
திரு. கேம்பல் என்னும் அந்த ஆடவர் புதிதாகக் கிடைத்த செல்வத்தைக் கொண்டு புது வீடு ஒன்றை வாங்கத் திட்டமிடுகிறார்.
 
சிறிய அளவில் செய்துவரும் தமது வியாபாரத்தை விரிவுபடுத்தவும் பரிசுப் பணம் உதவுமென்றும் அவர் கூறினார்.
 
அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றி பெற்று பெரும்பணம் கிடைத்தவர்கள், பாதுகாப்புக் கருதி இது போன்று மாறுவேடத்தில் வருவது வழக்கமே என்று அதிர்ஷ்டக் குலுக்கல் நிறுவனத்தின் அதிகாரி குறிப்பிட்டார்.
 
வெற்றியாளர்களிடம் பணம் இருப்பது தெரிந்தால், அதுவரை இல்லாத புதிய உறவினர்கள் எங்கிருந்தோ முளைப்பர் என்றும் கடன் கேட்டுத் தொந்தரவு செய்வர் என்றும் அவர் கூறினார்.
 
கடன் தர மறுத்துவிட்டால் வெற்றியாளர்களை இழிவுபடுத்தும் பழக்கம், ஜமைக்காவில் அதிகம் என்றார் பாதுகாப்பு அதிகார் ஒருவர். 

மூலக்கதை