ஹெலிகாப்டரில் இருந்து ஏவும் ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஹெலிகாப்டரில் இருந்து ஏவும் ஹெலினா சோதனை வெற்றிகரமாக நடந்தது.

எதிரி நாட்டு டேங்குகளை சுமார் 7-8 கிமீ தொலைவில் இருந்தபடியே, ஹெலிகாட்பர் மூலம் ஏவி அழிக்கும் ஹெலினா என்னும் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ)  தயாரித்து உள்ளது.

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ஏவுகணை, டேங்குகளை அழிப்பதில் உலகிலேயே அதிநவீனமானதாக கருதப்படுகிறது. 

இதன் சோதனை ஒடிசா மாநிலம்  பாலாசோரில் உள்ள சந்திப்பூரில்  நடந்தது.அப்போது, விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட ஹெலினா ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கி தகர்த்தது. 

இந்த ஏவுகணை ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் என மூத்த  அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை