வட மாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம்- மக்கள் பாதிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

தலைநகர் டெல்லியில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் ரயில் மற்றும் விமான சேவைகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் வழக்கம்போல், கடும் பனிமூட்டம் நிலவியதால் ரயில்கள் தாமதமாகின. இதன் காரணமாக பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் சாலையோரம் வசிக்கும் மக்கள் பெரும்  அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வீடு இல்லாத மக்கள் இரவு விடுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

குருத்வாரா பங்கள சாஹிப் பகுதியில் அருகில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளிள் வசிக்கும் மக்களும், கடும் குளிரால் பாதிப்பு அடைந்துள்ளனர். 

டெல்லியில், விடிந்து வெகுநேரம் ஆகியும் கட்டிடங்கள், நீர்நிலைகள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை