சாலை விதிகளை மதிக்காத, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்த புதுவை ஆளுனரால் பரபரப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சாலை விதிகளை மதிக்காமலும், ஹெல்மெட் அணியாமலும் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய புதுவை ஆளுநர் கிரண்பேடியின் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

புதுச்சேரியில்  இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என அங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆளுநர் கிரண்பேடி,  கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி, ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதமும் விதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். 

 புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் அருகே போக்குவரத்துக் காவலர்களுடன் இணைந்து கிரண் பேடி வாகன சோதனையில் ஈடுபட்டார். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை ஹெல்மெட் எங்கே? ஹெல்மெட் போடாமல் ஏன் வாகனத்தை ஓட்டுகிறீர்கள் என சராமாரியான கேள்விகளை எழுப்பினார்.

இனி ஹெல்மெட் அணிந்துதான் வாகனத்தை இயக்க வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். ஹெல்மெட் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியே நேரடியாக வீதியில் இறங்கி நடவடிக்கை எடுத்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மூலக்கதை