சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையரிடம் 3-ம் நாளாக சிபிஐ தீவிர விசாரணை

தினகரன்  தினகரன்
சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையரிடம் 3ம் நாளாக சிபிஐ தீவிர விசாரணை

மேகாலயா: சாரதா சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜிவ் குமாரிடம் சிபிஐ 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டிருக்கிறது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ராஜிவ் குமாரிடம் அதிகாரிகள் சீட்டு மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்முறையாக கடந்த 8-ம் தேதி ராஜிவ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக அழிக்கப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் குறித்து ராஜிவ் குமாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர் 2-வது நாளாக கடந்த 9-ம் தேதியும் ராஜீவ்குமார் விசாரிக்கப்பட்டார். இந்நிலையில் 3-வது நாளாக அவரிடம் ஷில்லாங்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. குணால் கோஷ் இடமும் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்த உத்தரவிடக்கோரி முதலீட்டாளர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை