எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும்: நீதிபதிகள் கருத்து

தினகரன்  தினகரன்
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும்: நீதிபதிகள் கருத்து

குமரி: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை பராமரிப்பு தொடர்பாக அறிக்கை தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசிடம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது. அதேபோல எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும் என கருத்து நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை