யாழில் பரபரப்பை ஏற்படுத்திய அரிய வகை வெள்ளை நாகங்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய அரிய வகை வெள்ளை நாகங்கள்!

யாழில் விவசாயிகள் சிலர் கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த அரிய வகை வெள்ளை நாகங்கள் இரண்டை மீட்டுள்ளனர்.
 
பின்னர் அதனை, பாதுகாப்பாக காட்டில் விட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் வெள்ளை நாகங்கள் இரண்டு விழுந்து கிடந்துள்ளது.
 
இதனை விவசாயி ஒருவர் கண்டுள்ளார். விரைந்து செயற்பட்ட குறித்த விவசாயி ஏனைய சிலரின் உதவியுடன் நாகங்களை கிணற்றிலிருந்து மீட்டுள்ளார்.
 
மிகவும் அரிய வகையிலான வெள்ளை நாகங்கள் என்பதனால் அவற்றை பாதுகாப்பாக காட்டுப் பகுதியில் கொண்டு விடுவித்துள்ளனர்.
 
இவற்றை யாழ். மக்கள் தெய்வங்களாகவே நோக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 

மூலக்கதை