சபரிமலையில் நாளை நடை திறப்பு இளம்பெண்கள் வரலாம் என்பதால் போலீஸ் குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் நாளை நடை திறப்பு இளம்பெண்கள் வரலாம் என்பதால் போலீஸ் குவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை நடை திறக்கப்படுகிறது. 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 6ம் தேதி இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவை தள்ளிவைத்துள்ளது. வரும் வாரத்தில் உச்சநீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (12ம் தேதி) திறக்கப்படுகிறது. இம்முறையும் சபரிமலைக்கு இளம்பெண்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஐப்பசி மாத பூஜைகள், சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை, மண்டல காலம் மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளின் போதும் இளம்பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு ெதரிவித்து போராட்டம் நடந்ததால் சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாசி மாத பூஜைக்கு நடை திறக்கும்போது இளம்பெண்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் மீண்டும் சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

சபரிமலையில் 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் ேபாலீசார் குவிக்கப்படுகின்றனர். நடை திறக்கப்படும் 12ம் தேதி காலை 10 மணிக்கு பின்னரே பக்தர்கள் நிலக்கலில் இருந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனால் போராட்டம் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து சபரிமலையில் நடை திறப்பதற்கு முன்னரே பதற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. நெய்யபிஷேகம்
நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.

அன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

மறுநாள் (13ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கும். 17ம் தேதி வரை தினமும் நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

தினமும் இரவில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜைகளும் நடைபெறும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்.

.

மூலக்கதை