ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரசாதம் சாப்பிட்ட 40 மாணவர்கள் கவலைக்கிடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரசாதம் சாப்பிட்ட 40 மாணவர்கள் கவலைக்கிடம்

லோகர்தாகா: பிரசாதம் சாப்பிட்ட 40 மாணவர்களுக்குத் திடீரென்று உடல் நலக்குறை ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவில், வசந்த பஞ்சமி என்ற சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோகர்தாகா என்ற மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் விழா கொண்டாப்பட்டது. பூஜை முடிந்து மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதை சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்திபேதி ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மருத்துவமனை டாக்டர் எஸ். எஸ். காலித் கூறுகையில், ‘‘இதுவரை 40 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், பிரசாதமாகக் கொடுக்கப்பட்ட பூந்தியை சாப்பிட்டுள்ளனர். அதைச் சாப்பிட்டதுமே வாந்தி எடுத்துள்ளனர்.

விஷம் கலந்த பூந்தி எனத் தெரிகிறது.

தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்றார்.

.

மூலக்கதை