ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன்

தினகரன்  தினகரன்
ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன்

புதுடெல்லி: ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது. 15 நாள்களில் நாடாளுமன்ற தொழில்நுட்ப நிலைக்குழு முன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ட்விட்டர் இந்திய பிரதிநிதி ஆஜராக வந்த நிலையில், அவரை சந்திக்க நிலைக்குழுவினர் மறுத்துவிட்டனர். தேர்தலில் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்க ஏற்கனவே தலைமை அதிகாரிக்கு நோட்டீஸ் தரப்பட்டது.

மூலக்கதை