கன்னடத்திலும் வெற்றி பெற்ற அனுபமா

தினமலர்  தினமலர்
கன்னடத்திலும் வெற்றி பெற்ற அனுபமா

பிரேமம் படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன், அதன்பிறகு பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யாவுடன் நடிக்கத் தொடங்கி, தொடர்ந்து தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் - த்ரிஷா நடித்த கொடி படத்தில் நடித்தவருக்கு அதன்பிறகு படங்கள் இல்லை.

இந்நிலையில், கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நாத சார்வபோவ்மா படத்தில் வக்கில் வேடத்தில் நடித்திருந்தார். பிப்ரவரி 7-ந்தேதி இந்த படம் வெளியானது. இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, அனுபமாவின் நடிப்பும் பேசப்பட்டு வருகிறதாம். அதனால் மேலும் சில புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

மூலக்கதை