மீண்டும் ரித்திகா சிங்

தினமலர்  தினமலர்
மீண்டும் ரித்திகா சிங்

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தார். அரவிந்த்சாமியுடன் அவர் நடித்த வணங்காமுடி படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது பாக்சர் என்ற படத்தில் நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ரித்திகா நடிக்கும் தமிழ் படம் இதுவாகும். அருண் விஜய் ஹீரோவாக பாக்சர் வேடத்தில் நடிக்க, விளையாட்டு செய்தியாளராக ரித்திகா நடிக்கிறார். எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த விவேக் இயக்குகிறார்.

மூலக்கதை