மம்முட்டியை பாராட்டிய சூர்யா

தினமலர்  தினமலர்
மம்முட்டியை பாராட்டிய சூர்யா

தமிழில் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த பேரன்பு படம், கடந்த பிப்., 1-ந்தேதி திரைக்கு வந்தது. அதையடுத்து தெலுங்கில் மதி வி.ராகவ் இயக்கத்தில் மம்முட்டி நடித்த யாத்ரா படம் பிப்ரவரி 8-ந்தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், இந்த படங்களைப்பற்றி நடிகர் சூர்யா டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார் அதில், பேரன்பு, யாத்ரா என்ற இரண்டு படங்களிலுமே மாறுபட்ட கதைகளில் நடித்துள்ளார் மம்முட்டி. உண்மையான, தூய்மையான சினிமாவை கொடுத்ததற்காக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை