ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளுக்கு மூக்கில் ரத்த கசிவு : பல பயணிகள் காது வலியால் அவதி

தினகரன்  தினகரன்
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளுக்கு மூக்கில் ரத்த கசிவு : பல பயணிகள் காது வலியால் அவதி

மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் இருந்து நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளுக்கு மூக்கில் ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளது. மஸ்கட்டில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் காற்றழுத்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 4 பயணிகளின் மூக்கில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. 3 குழந்தைகள் உட்பட 188 பேர் விமானத்தில் பயணம் செய்த நிலையில், பல பயணிகளுக்கு காது வலியும் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகளுக்கு விமான நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து 166 பயணிகளுடன் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இதே போன்று காற்றழுத்த பிரச்சனை ஏற்பட்டதால் 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்து கசிவு ஏற்பட்ட சம்பவம் நடந்தது.   

மூலக்கதை