5% இட ஒதுக்கீடு கோரி தண்டவாளத்தில் அமர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் முழக்கம் : 55 ரயில்கள் ரத்து

தினகரன்  தினகரன்
5% இட ஒதுக்கீடு கோரி தண்டவாளத்தில் அமர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் முழக்கம் : 55 ரயில்கள் ரத்து

ஜெய்ப்பூர் : 5% இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி குஜ்ஜார் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் வன்முறையாக மாறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குஜ்ஜார் சமூகத்தினருக்கு ஆதரவாக ராஜஸ்தானில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தோல்பூர் என்ற இடத்தில் நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தனர். 5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி குஜ்ஜார் சமூகத்தினர் அறிவித்துள்ள ரயில் மறியல் போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது. சவாய் மாதோபோர் மாவட்டத்தில் டெல்லி, மும்பை நகரங்களை இணைக்கும் இருப்பு பாதையில் அமர்ந்தபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் வரை போராட்டத்தை தொடர குஜ்ஜார் சமூகத்தினர் முடிவு எடுத்துள்ளனர். மறியல் போராட்டத்தில் 55 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கும் 5% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று குஜ்ஜார் சமூகத்தினர் வலியுறுத்தி இருக்கின்றனர்.  பிப்ரவரி 10ம் தேதி :18 ரயில்கள் கோட்டா பிரிவில் ரத்து செய்யப்பட்டனபிப்ரவரி 11ம் தேதி: 10 ரயில்கள்,ரத்து செய்யப்பட்டனபிப்ரவரி 12ம் தேதி :12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டனபிப்ரவரி 13ம் தேதி :15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன

மூலக்கதை