விஜய் ஆண்டனியும் களம் இறங்கும் அரசியல்

தினமலர்  தினமலர்
விஜய் ஆண்டனியும் களம் இறங்கும் அரசியல்

நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'சர்க்கார்' படம் முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்பதால், படம் ரிலீசான பின், லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், படம் நன்கு ஓடியதால், அடுத்ததாக, சூர்யாவும், அதே பாணியில் நடிக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் 'என்.ஜி.கே.,' படமும் அரசியல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய், சூர்யாவை அடுத்து நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் 'பாலிடிக்ஸ்' படமும் முழு அரசியல் படமாக எடுக்கப்படுகிறது. இதற்காக, முக்கிய அரசியல்வாதிகள் குறித்த வரலாறுகளை அறிந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. தற்போது, பத்திரிகையாளர் பாபு யோகேஸ்வர்ன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கும் 'தமிழரசன்' படம் முடிந்த கையோடு, பாலிடிக்ஸ் படபிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

மூலக்கதை