'டின்னர்' வார்த்தையே அருவெறுப்பு: ஷெர்லின்

தினமலர்  தினமலர்
டின்னர் வார்த்தையே அருவெறுப்பு: ஷெர்லின்

கவர்ச்சிப் படங்களில் தாராளமாக நடிப்பவர் இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா. இந்தி, தெலுங்கு மற்றும் பல ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கும் ஷெர்லின், காமசூத்ரா 3டி படத்திலும் நடித்துள்ளார். அவர், பாலிவுட்டில் இருக்கும் ஆண் பிரமுகர்கள் குறித்து ஆத்திரமாக கூறியிருப்பதாவது:

நடிப்பதும், மாடலிங் செய்வதும் என்னுடைய தொழில். அந்தத் தொழில் நிமித்தமாக எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடந்து கொள்கிறேன். நான் நிர்வாணமாக போஸ் கொடுப்பது கூட தொழில் நிமித்தமாகத்தான். அதற்காக, நான் எல்லா தவறுகளுக்கும் ஆட்படுவேன் என ஆண் சமூகம் தன்னிச்சையாக நினைத்துக் கொண்டால், அதுதான் முக்கியத் தவறு. திரையுலகில், குறிப்பாக, பாலிவுட்டில் ஏராளமான ஆண் மிருகங்கள் இருக்கின்றன.

சினிமா வாய்ப்புத் தேடி வரும் இளம் பெண்களை, அந்த ஆண் மிருகங்கள், டின்னருக்கு வருகிறாயா? வேலை விஷயமாக உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லி அழைக்கின்றன. ஆனால், உண்மையில் அதன் அர்த்தமே வேறு. அதாவது, இப்படி ஒருவர் டின்னருக்கு அழைத்தால், அழைக்கப்படும் பெண், அன்றைய தினத்து இரவை, அந்த ஆண் மிருகத்துடன் கழிக்க வேண்டும் என்பது அர்த்தம்.

சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பல ஆண் மிருகங்கள், என்னை அப்படி இரவுக்கு அழைத்திருக்கின்றன. துவக்கத்தில், அவர்கள் நோக்கம் என்ன என்று எனக்குப் புரியவில்லை. போக போகத்தான் புரிந்து கொண்டேன். அதனால், டின்னர் என்ற வார்த்தையை இப்போது எங்கு கேட்டாலும் எனக்கு அருவெறுப்புத்தான் வருகிறது. நாராசமாக இருக்கிறது. இனி, சாதாரணமாக யாரும் என்னிடம் டின்னருக்கு வா என்று அழைத்து விடக் கூடாது. அப்படியொரு வெறுப்பின் உச்சத்தில் நான் இருக்கிறேன்.

இவ்வாறு ஷெர்லின் கூறியுள்ளார்.

மூலக்கதை