திலீப் படத்தில் முக்கிய வேடத்தில் நதியா

தினமலர்  தினமலர்
திலீப் படத்தில் முக்கிய வேடத்தில் நதியா

ஒருகாலத்தில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்த நடிகை நதியா, தனது இரண்டாவது இன்னிங்சை கடந்த பத்து வருடத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்காமல் செலக்டிவாக வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே தலைகாட்டி வருகிறார். கடந்த வருடம் கூட அல்லு அர்ஜுன் அம்மாவாக தெலுங்கில் வெளியான என் பெயர் சூர்யா படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து தற்போது மலையாளத்தில் திலீப் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நதியா. இந்த படத்தில் திலீப் ஜோடியாக அனு சித்தாரா என்பவர் நடிக்கின்றார் திலீப், நதியா தவிர நடிகர் சித்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இவர்கள் மூவரின் சிறுவயது காட்சிகளில் நடிப்பதற்காக இவர்கள் சாயலில் உள்ள மூன்று குழந்தை நட்சத்திரங்களை தேடிவருகிறார்கள். கேபி.வியாசன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

மூலக்கதை