பேரன்பு வெற்றியை மம்முட்டியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர்

தினமலர்  தினமலர்
பேரன்பு வெற்றியை மம்முட்டியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர்

மம்முட்டி நடிப்பில் வெளியான பேரன்பு படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன், ஓரளவு வசூல் ரீதியாகவும் நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மம்முட்டி நடித்து வரும் மதுர ராஜா படத்தின் இயக்குனர் வைசாக் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது படப்பிடிப்பு தளத்திலேயே இந்தப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தநிலையில் படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் நேற்று கேரளாவில் மதுர ராஜா படப்பிடிப்பு நடைபெறும் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று மம்முட்டியுடன் சேர்ந்து பேரன்பு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதேசமயம் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள படத்தின் இயக்குனர் ராம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை