குருசேத்திர போருடன் துவங்கும் விக்ரம் படம்

தினமலர்  தினமலர்
குருசேத்திர போருடன் துவங்கும் விக்ரம் படம்

விக்ரம் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் படம் மஹாவீர் கர்ணா. ஹிந்தி, மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில், கர்ணனாக நடிக்கிறார் விக்ரம். பிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்க இருக்கிறது.

முதல்கட்ட படப்பிடிப்பில் மகாபாரத குருசேத்திர போர்க்களக் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட 1000 துணை நடிகர்களுக்கு மேல் இந்த காட்சியில் பங்கு பெறுகிறார்கள். 30 அடி நீளமுள்ள ரதம் ஒன்றும் இந்த போர்க்கள காட்சியில் இடம் பெறுகிறது. மொத்தம் 18 நாட்கள் இந்த காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் கிளைமாக்ஸில் சுமார் அரை மணி நேரம் இந்த போர்க்களக் காட்சி இடம்பெற இருக்கிறதாம்.

மூலக்கதை