குஜராத்தில் ரூ.3.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

தினமலர்  தினமலர்
குஜராத்தில் ரூ.3.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

நவ்சாரி: குஜராத் மாநிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.





பணம் மதிப்பிழப்பு

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி நாடு முழுவதும் பழைய ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அவைகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இதனால் மக்கள் அனைவரும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு மாறியது மட்டுமல்லாமல் பழைய ரூபாய் நோட்டுக்களை அரசுடமை வங்கிகளில் ஒப்படைத்தனர்.




ரூ 3.5 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஆயிரம் மதிப்பிலான 13 ஆயிரத்து 432 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஐநூறு மதிப்பிலான 43 ஆயிரத்து 300 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை