அபுதாபி நீதிமன்றங்களில் மூன்றாவது மொழியாக இந்தி

தினகரன்  தினகரன்
அபுதாபி நீதிமன்றங்களில் மூன்றாவது மொழியாக இந்தி

துபாய்: அபுதாபி நீதிமன்றங்களில் வழக்காடுவதற்கு மூன்றாவது அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மக்கள் தொகையில் சுமார் 90 லட்சம் பேர் அதாவது மூன்றில் இரண்டு பங்கு பேர் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். இந்தியர்கள் சுமார் 26 லட்சம் பேர் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்காடு முறையை வெளிப்படை தன்மையுள்ளதாக மாற்று வகையில் இந்தி  மொழி சேர்க்கபட்டுள்ளது.அபுதாபி நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அரபிக், ஆங்கிலம் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் தொழிலாளர்  வழக்குகளில் மூன்றாவது அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்தலாம் என்று அபுதாபி நீதித்துறை அறிவித்துள்ளது. இந்தி மொழியை பேசுவோர் வழக்காடும் நடைமுறைகள், உரிமை மற்றும் கடமைகளை புரிந்துக் கொள்வதற்கு ஏதுவாக மூன்றாவது அலுவல் மொழியாக இந்திக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அபுதாபி நீதித்துறையின் வெப்சைட்டில் தகவல்களை பதிவு செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை